
உலகளவில் பல்வேறு பயனர்களுக்கு சாட்ஜிபிடி சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாட்ஜிபிடியின் ஜிப்லி எனப்படும் புகைப்படத்தை ஓவியமாக மாற்றும் சேவையில் பிழைகள் ஏற்படுவதாகவும் இதனால் சாட்ஜிபிடி சேவையும் பாதிக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓபன் ஏஐ நிறுவனத்துக்குச் சொந்தமானது சாட்ஜிபிடி. செய்யறிவு தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் சாட்ஜிபிடியை உலகம் முழுவதும் பல்வேறு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சாட்ஜிபிடியில் புதிய அம்சமாக செய்யறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய ஜிபிடி - 4.0 என்னும் புகைப்பட ஊக்கியின் மூலம் ஜிப்லி சேவை வழங்கப்படுகிறது.
இதன்மூலம் பயனர்கள் வழங்கும் புகைப்படங்களில் உள்ள உருவங்கள் மற்றும் பின்னணிகளை ஓவியமாக மாற்றி ஜிப்லி வழங்குகிறது. இது பெரும்பாலும் அனிமி எனப்படும் கார்ட்டூன் கதாபாத்திர வடிவை பிரதிபலிக்கிறது.
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான குரூக் செய்யறிவு தொழில்நுட்பமும் இச்சேவையை வழங்குகிறது. எனினும் சமீபத்தில் பெரும்பாலான மக்கள் ஜிப்லி மூலம் தங்கள் புகைப்படங்களை ஓவியங்களாக மாற்றுவதால், சாட்ஜிபிடி சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இணையதளப் பக்கங்கள் மற்றும் இணைய சேவைகளின் நிகழ் தரவுகளை வழங்கிவரும் டவுன்டிடக்டர் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சேவையை சுமூகமாகப் பயன்படுத்த முடியவில்லை என 299 பயனர்கள் புகார் எழுப்பியுள்ளனர். இதில் 59% புகார்கள், சாட்ஜிபிடி செய்யறிவு தொழில்நுட்ப சேவை குறித்து எழுந்துள்ளது.
இதேபோன்று சாட்ஜிபிடி சேவையில் பயனர்கள் சிரமத்தை உணர்ந்துள்ளதாக மார்ச் 30 ஆம் தேதி மாலை 4.40 மணியளவில் ஓபன் ஏஐ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனைச் சரிசெய்யும் பணிகளில் தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிக்க | ஜிப்லியால் உறக்கமின்றி தவிக்கும் ஊழியர்கள்! சாட் ஜிபிடி நிறுவனர் வேண்டுகோள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.