
வாஷிங்டன்: அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(மே 12) பேசுகையில், “கடந்த சனிக்கிழமை எனது அரசு நிர்வாகம் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்தது. அணு ஆயுதங்கள் பெருமளவில் வைத்துள்ள இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிரந்தர சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பும் எட்டப்படலாம்.
நாங்கள் நிறைய உதவியுள்ளோம். வர்த்தகத்திலும் உதவியிருக்கிறோம். நான் இரு நாடுகளுடனும் இதனை கூறினேன் ‘நாங்கள்(அமெரிக்கா) உங்களுடன்(பாகிஸ்தான், இந்தியா) ஏராளமான வர்த்தகத்தை மேற்கொள்ளவிருக்கிறோம். இந்தநிலையில், இதனை நிறுத்திக் கொள்வோம்.
சண்டையை நிறுத்தினால் அமெரிக்கா வர்த்தகம் செய்யும். சண்டையை நிறுத்தாவிட்டால், எந்தவொரு வர்த்தக நடவடிக்கைகளையும் அமெரிக்கா உங்களுடன் மேற்கொள்ளாது’” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வர்த்தகம் தொடர்பான பேச்சு நடைபெறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.