சட்டம்-ஒழுங்கு ஐசியு-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ரஷிய அதிபர் புதின் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...

புதின் - டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் ட்ரூத் சோசியல் என்ற சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நான் மட்டும் இல்லையென்றால், ரஷியாவிற்கு ஏற்கெனவே நிறைய மோசமான சம்பவங்கள் நடந்திருக்கும் என்பதை புதின் உணரவில்லை. நான் சொல்வது மிகவும் மோசமானது. அவர் நெருப்புடன் விளையாடுகிறார்!” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ரஷியா - உக்ரைன் இடையே மிகவும் மோசமான அளவில் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபராக தான் பதவியேற்றதும் இரு நாடுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் முடிவு எட்டப்படவில்லை. ஆனால், டிரம்ப்பின் தீவிர அமைதி முயற்சிக்கிடையிலும் உக்ரைன் மீது ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.

இருந்தாலும் இதுதொடா்பாக அதிபர் புதினை விமா்சிப்பதை டிரம்ப் பெரும்பாலும் தவிா்த்துவந்தார். இந்தச் சூழலில், கீவ் நகரைக் குறிவைத்து ரஷியா இதுவரை இல்லாத ட்ரோன் தாக்குதலை சனிக்கிழமை இரவு நடத்தியது. இதில் 13 போ் பலியாகினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, அதிபர் புதின் மீது அதிருப்தி தெரிவித்திருந்த டிரம்ப், மீண்டும் கடுமையாக சாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.