பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாகிஸ்தான் சோதனைச் சாவடிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் பலி!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2025, 11:46 am

DIN

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

கைபர் பக்துன்குவாவின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், நேற்று (மே 28) மாலை பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகளின் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மாவட்டத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், ராணுவ இடைநிலை அதிகாரி உள்பட 4 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இருப்பினும், இதுகுறித்து ராணுவத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்மாகாணத்தின் முஸாகெல் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்த பயங்கரவாதிகள் ரார்ரா ஷாம் பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் நவீன வெடிகுண்டுகளைப் பொருத்தியபோது, பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அந்த பயங்கரவாதிகள் அனைவரும் அப்பகுதியில் பயணிகள் பேருந்தின் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.