கணவரைப் போல இருக்கிறார்..! ஜே.டி. வான்ஸை கட்டியணைத்துக் கொண்ட சார்லி கிர்க் மனைவி!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தனது கணவரைப் போல இருப்பதாக சார்லி கிர்க் மனைவி தெரிவித்துள்ளதைப் பற்றி...
ஜே.டி. வான்ஸுடன் எரிகா கிர்க்.
ஜே.டி. வான்ஸுடன் எரிகா கிர்க்.படம்: ஏபி
Published on
Updated on
2 min read

என்னுடைய கணவர் கிரிக் சார்லியிடம் இருந்த பல்வேறு ஒற்றுமைகள் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் இருப்பதாக எரிகா கிர்க் தெரிவித்து சம்பவம் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் கடந்த செம்படம்பர் 11 ஆம் தேதி  நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், சார்லி கிர்க்கின் மரணத்திற்கு பிறகு அவரது மனைவி எரிகா கிர்க், இந்த வார துவக்கத்தில் டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் கலந்து கொண்டிருந்தார்.

மேடையில் பேசிய எரிகா கிர்க், “என்னுடைய கணவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், ஜே.டி. வான்ஸிடம் என கணவரைப் போன்ற சில ஒற்றுமைகளைக் காண்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த ஜே.டி. வான்ஸ், எரிகாவை ஆரத்தழுவிக் கொண்டார்.

இது கடந்து போகக்கூடிய நிகழ்வாக இருந்தாலும், எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக நியூயார்க் டைம்ஸ் எழுத்தாளர் ஷானன் வாட்ஸ் வெளியிட்டுள்ள பதிவு அமைந்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், “தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2026 ஆம் ஆண்டின் இறுதியில் சார்லி கிர்க்கின் மனைவி எரிகாவை திருமணம் செய்துகொள்வார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது பதிவு 90 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை ஜே.டி. வான்ஸை நோக்கித் திருப்பியுள்ளது.

எழுத்தாளர் ஷானன் மட்டுமின்றி திருநங்கைகளின் ஆர்வலர் அரி ட்ரென்னன் வெளியிட்டுள்ள பதிவில், “பதவியில் இருக்கும்போது விவாகரத்து செய்யும் முதல் துணை அதிபராக அவர் இருக்கப் போகிறார்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நியூயார்க் டைம்ஸ் எழுத்தாளர் ஷானன் வாட்ஸ் வெளியிட்டுள்ள பதிவு.
நியூயார்க் டைம்ஸ் எழுத்தாளர் ஷானன் வாட்ஸ் வெளியிட்டுள்ள பதிவு.

இவர்கள் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்று வைத்துக் கொண்டால்கூட, கடந்த சில நாள்களாகவே ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவியான இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த உஷா சிலிகுரி இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு சர்ச்சைக் கருத்துகள் எழுந்தன.

மேலும், தனது இந்து மனைவி உஷா ஒருநாளில் கிறிஸ்துவராக மாறுவார் என்று நம்புவதாகவும், தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக வளர்க்க முடிவு செய்திருப்பதாகவும் ஜே.டி. வான்ஸ் கூறியிருந்தார். உஷா, தன்னிடம் மதம் மாறும் எண்ணம் இல்லை எனப் பலமுறை கூறியுள்ள நிலையில், வான்ஸின் கூற்று மிகவும் போலியானது என பலரும் அவரை விமர்சித்தனர்.

அதுஒருபுறம் இருக்க 2029 ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்’ (Make America Great Again) அதிபர் வேட்பாளராக போட்டியிட ஜே.டி. வான்ஸ் முனைப்புக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இதனால், அவர்கள் ஒரு இந்துப் பெண்ணை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் கிறிஸ்துவரான எரிகாவை அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்வார் என்ற பல தரப்பட்டோரின் கருத்துகள் ஜே.டி. வான்ஸின் விவாகரத்து வதந்திக்கு மேலும் வலு சேர்த்துள்ளன.

Summary

See similarities of husband in JD: Erika Kirk's mushy hug with Vance sparks buzz

ஜே.டி. வான்ஸுடன் எரிகா கிர்க்.
அமெரிக்காவின் கனவை எங்களுக்கு ஏன் விற்றீர்கள்? - இந்திய மாணவியின் கேள்வியும் ஜே.டி. வான்ஸின் பதிலும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com