

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர்.
இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் நோக்கி ரயில் சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. ரயில் கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே வந்தபோது மர்மநபர்கள் பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினர்.
உடனே ரயில் ஹண்டிங்டன் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒன்பது பேரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களின் அடையாளம் மற்றும் தாக்குதலின் நோக்கம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தில் போலீஸார் மற்றும் தடயவியல் குழுக்கள் இரவு முழுவதும் ஆய்வு செய்தனர். இதனிடையே கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இச்சம்பவம் பயங்கரமானது மட்டுமின்றி ஆழ்ந்த கவலைக்குரியது என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அவர், அப்பகுதியில் உள்ள அனைவரும் போலீஸின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.