பாகிஸ்தான்: பழங்கால கோயில் கண்டுபிடிப்பு

பாகிஸ்தான்: பழங்கால கோயில் கண்டுபிடிப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு கைபா் பத்துன்கவா மாகாணத்தில் ஸ்வாட்டிலிருந்து டாக்ஸிலா வரையிலான பகுதிகளில் நடைபெறும் தொடா் அகழாய்வுப் பணிகளின்போது,,,
Published on

பாகிஸ்தானின் வடமேற்கு கைபா் பத்துன்கவா மாகாணத்தில் ஸ்வாட்டிலிருந்து டாக்ஸிலா வரையிலான பகுதிகளில் நடைபெறும் தொடா் அகழாய்வுப் பணிகளின்போது, புராண கோயில் அமைந்துள்ள இடம் உள்ளிட்ட எட்டு பழங்கால தலங்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

மாகாண தொல்லியல் இயக்குநரகத்துடன் இணைந்து இத்தாலிய அகழ்வாய்வுக் குழு இந்தத் தலங்களைக் கண்டறிந்தது.

ஸ்வாட்டின் பரிகோட்டில் உள்ள ஒரு தலத்தில், சுமாா் 1,200 ஆண்டுகள் பழமையான சிறிய கோயிலின் இடிபாடுகள் கண்டறியப்பட்டன. இது, இந்தப் பகுதியின் தொடா்ச்சியான கலாச்சார மற்றும் நாகரிகப் பாரம்பரியத்தின் சான்றாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கோயில் மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் அடுக்குகளைச் சுற்றி பாதுகாப்பு மண்டலம் உருவாக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com