

மணிலா: பிலிப்பின்ஸில் கேல்மெகி புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன் 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, மத்திய பிலிப்பின்ஸில் செபு மாகாணம் உள்பட பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளம் மற்றும் சூறைக்காற்றால் முடங்கியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்திலிருந்து தப்பிக்க மக்கள் வீடுகள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
பிலிப்பின்ஸில் புயல் கடந்து செல்லும்போது மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசியதால் மரங்கள் பல முறிந்து விழுந்ததுடன், பெருவெள்ளத்தால் வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதும் அளவுக்கு பலத்த சேதமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அங்கிருந்து வரும் படங்கள் விவரிக்கின்றன.
பிலிப்பின்ஸைத் தொடர்ந்து இந்தப் புயல் சின்னம், தென் சீனக் கடல் பகுதிக்கு அருகே பாலவான் மாகாணத்தில் புதன்கிழமை(நவ. 5) அதிகாலையில் கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.