

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், மக்களிடம் பேசியபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரிடம் அத்துமீறி முத்தமிட முயன்றுள்ளார்.
மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபரான கிளாடியா ஷீன்பாம், மெக்சிகோ சிட்டி பகுதியில் நேற்று (நவ. 4) சாலையில் இறங்கி மக்களோடு உரையாடினார். அப்போது, மக்களில் சிலர் அதிபர் ஷீன்பாமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதிபர் ஷீன்பாமை கட்டியணைத்து அவரை முத்தமிட முயன்றுள்ளார். இதையடுத்து, அவரது பிடியில் இருந்து ஷீன்பாம் விலகியதுடன் அவரின் பாதுகாவலர்கள் அந்த நபரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, தன்னிடம் அத்துமீறிய நபரை அதிபர் ஷீன்பாம் சிரித்தபடி கையாண்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து மெக்சிகோ அதிபர் அலுவலகம் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
மெக்சிகோவின் முதல் பெண் அதிபராகப் பதவி வகிக்கும் கிளாடியா ஷீன்பாம், அவ்வப்போது மக்களிடம் நேரடியாகச் சென்று உரையாடி புகைப்படம் எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஆனால், நாட்டின் அதிபரிடமே ஒருவர் அத்துமீறிய சம்பவம் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பின் மீது சந்தேகத்தை எழுப்புவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: இருளுக்கு மத்தியில் நியூ யார்க்கில் ஒளி: அரங்கை அதிரவிட்ட மம்தானி பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.