

வாகா எல்லையில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 300 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்திவைத்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த நபர்கள் மூவரும் மேல்முறையீடு செய்யவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
வாகா எல்லையில் கடந்த 2014-இல் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்தப் பயங்கரவாத வழக்கில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டு கீழமை நீதிம்ன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஹசீனுல்லா ஹசீனா, ஹபிபுல்லா மற்றும் கஜினி என்ற சையத் ஜன் ஆகிய மூவருக்கும் கடந்த 2020-இல் லாகூரிலுள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவு நீதிமன்றம் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் சேர்த்து மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த்து. இந்த மூவரும் தடை செய்யப்பட்ட ஜமாத்-உல்-அரார் அமைப்பச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குற்றவாளிகள் தரப்பிலிருந்து லாகூர் உயர்நீதிம்ன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுநீதிபதி சையத் ஷாபாஸ் அலி ரிஸ்வி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அக்ரம் குரேஷி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட 9 மாதங்களுக்குப்பின் மேற்கண்ட மூவரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்கப்பட்டிருப்பதாகவும், இந்த நபர்கல்தான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தாஅர்கள் என்பதி நிரூபிக்க போதுமான ஆதரங்களோ சாட்சியங்களோ இல்லை என்று வாதிடப்பட்டது.
இதனிடையே, கீழமை நீதிம்ன்றத்தில் ஐந்தாண்டுகளுக்கும் மேல் நீடித்த வழக்கு விசாரணையில், இவ்வழக்கில் 100-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் ஆஜராக்கப்பட்டு அதன்பின்னரே மேர்கண்ட மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட லாகூர் உயர் நீதிம்ன்றம், மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு குற்ரம்சாட்டப்பட்ட நபர்கள் மீது குற்றத்தை நிரூபிக்க போதிய சட்சியங்கள் இல்லாததைச் சுட்டிக்காட்டி அந்தத் தண்டனையை நிறுத்தி வைத்து அவர்களை விடுவித்திருப்பதுடன் மேல் முறையீடு செய்யவும் அனுமதி பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.