

பாகிஸ்தானில், இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்லாமாபாத் நகரத்தின், ஜி -11 பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (நவ. 11) கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டதுடன், ஏராளமான மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெடிகுண்டு தாக்குதலில் அங்குள்ள வாகனங்கள் தீயில் பற்றி எரியும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு, இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்துடன், இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டபோது வெளியான பயங்கர சத்தம் சுமார் 6 கி.மீ. தூரத்திற்கு கேட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் (2025) பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட ஃபுங் - வாங் புயல்! தைவானில் 3,300 பேர் வெளியேற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.