மத்திய சீனாவை திபெத்துடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த மிகப்பெரிய பாலம் ஒன்று, ஒரு சில வினாடிகளில் இடிந்து தரைமட்டமானது.
சீனாவின் சிசுவான் மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஹோங்கி பாலமானது, செவ்வாயன்று பகுதியாக உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
வெறும் பாலம் இடிந்து விழவில்லை, அதன் கடன் கணக்கான கான்கிரீட்கேள் ஆற்றில் கலந்து, அங்கிருந்த காற்று முழுவதும் பாலத்தின் மாசு கலந்து பார்க்கவே அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த விபத்துக் காட்சி.
பாலம் அமைந்திருந்த பகுதிக்கு அருகே இருந்த அணையில் அதிகப்படியான தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்த தண்ணீரின் அழுத்தமே, மலைப் பகுதியில் விரிசலை ஏற்படுத்தி, அதனால், புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
758 மீட்டர் நீள்ம் கொண்ட மேம்பாலத்தின் ஒரு பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திங்கள்கிழமை மேம்பாலம் மூடப்பட்டிருந்த நிலையில் பெரிய அளவில் அபாயம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரு மிகப்பெரிய மலைப் பகுதியை ஒட்டி, இந்த பாலம் அமைக்கப்பட்டிருந்ததும், அதற்கு மிக அருகே அணைக்கட்டு இருந்த நிலையில், அணைக்கட்டின் அழுத்தம் காரணமாகவே மேம்பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்குக் காரணம், மேம்பால வடிவமைப்பில் நடந்த குளறுபடியா அல்லது கட்டுமானத்தில் நடந்த சிக்கலா என்று விசாரணை தொடங்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 6 தொழிலாளா்கள் உயிரிழப்பு

உ.பி.யில் பாலம் இடிந்து 6 தொழிலாளர்கள் பலி! உதவிப் பொறியாளர் இடைநீக்கம்

உ.பி.யில் பாலம் இடிந்து விபத்து: 6 பேர் பலி!

பிகார்: இடிந்து விழுந்த 10 ஆண்டுகள் பழமையான பாலத்தின் தூண்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



