24 மணிநேரத்திற்குள்..! வங்கதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

வங்கதேச நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து...
வங்கதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்...
வங்கதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்...ANI
Published on
Updated on
1 min read

வங்கதேச நாட்டில், 24 மணிநேரத்துக்குள் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் அருகிலுள்ள பைபைல் எனும் பகுதியை மையமாகக் கொண்டு இன்று (நவ. 22) காலை 10.36 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பெரியளவில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, வங்கதேசத்தில் நேற்று காலை ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டன. மேலும், 9 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியான நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர்.

இத்துடன், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வியத்நாம் வெள்ளம்! பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு!

Summary

Another earthquake has been reported in Bangladesh within 24 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com