வியத்நாம் நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
வியத்நாமில் பெய்த கனமழையால், மத்திய மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 28,400-க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், 80,000 ஹெக்டேர் அளவிலான விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளதாக, வியத்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 13 பேர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகளில் அரசுப்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இத்துடன், வியத்நாமில் 32 லட்சம் கால்நடைகள் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுது. ஏராளமான வீடுகள், கட்டடங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் வெள்ளத்தில் சேதமாகியுள்ளதால் அரசுக்கு சுமார் ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, வியத்நாமில் கால்மேகி, புவாலோய் போன்ற புயல்களினால் அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால், அங்கு மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வியத்நாம் அரசு 17.93 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரண நிதியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டிரம்ப் ஒரு ஃபாசிஸ்ட்? நேருக்கு நேர் மம்தானி அளித்த பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.