

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் விற்பனைப் பிரிவில் பணிநீக்கத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
செயற்கை நுண்ணறிவால் பல்வேறு ஐடி நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கத்தை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனமும் 'விற்பனை' துறையில் பணி நீக்கத்தை அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே அதுவும் சிறிய எண்ணிக்கையில் மட்டுமே இந்த பணிநீக்கம் நடைபெறுவதாகவும் அதேநேரத்தில் நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்புகளும் இருக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காகவே இந்த பணிநீக்க நடவடிக்கை என்றும் விளக்கம் தெரிவித்துள்ளது.
முக்கிய வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்களுக்கு சேவை செய்யும் கணக்கு மேலாளர்கள், விற்பனைத் துறையில் உள்ள மேலாளர்கள், ஆப்பிளின் விளக்க மையங்களில் பணிபுரிவோர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை, நீதித்துறை உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் விற்பனைக் குழுவை நீக்கும் பணிகளில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிக்க | உடல் எடையைக் குறைக்க தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.