உடல் எடையைக் குறைக்க தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டுமா?

உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பற்றி...
walking
கோப்புப்படம்ENS
Published on
Updated on
2 min read

உடல் எடையைக் குறைக்க உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் எத்தனை அடிகள் நடக்க வேண்டும்?

நவீன கால உணவு முறைகள், வாழ்க்கை முறையால் இப்போது உடல்சார்ந்த பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் பல்வேறு உடல்நல பாதிப்புகளைக் குறைக்க உடற்பயிற்சி அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உடற்பயிற்சியின் அவசியத்தை பலரும் உணர்ந்துள்ளனர். உடல் பருமன் மற்றும் இதர பிரச்னைகளுக்கு மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்நிலையில் உடல் எடையைக் குறைக்க உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் 10,000 அடிகள்/நடைகள் நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. சிலர் நாள் ஒன்றுக்கு 4,000 - 5,000 அடிகள் நடந்தால் போதும் என்கின்றனர்.

ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த அளவுக்கு நடக்கவும் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்கவுமே நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தினமும் 7,000 அடிகள் நடப்பது இறப்பு விகிதத்தை 47% குறைக்கும் என்று கூறுகிறது.

57 ஆய்வுகளின் தரவுகளில் இருந்து இந்த முடிவுகள் லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அதாவது தினமும் 10,000 அடிகள் நடப்பது மிகச்சிறந்தது என்றாலும் நாள் ஒன்றுக்கு 7,000 அடிகள் என்பது போதுமானது என்று கூறுகிறார்கள்.

இது உடல் எடை மட்டுமின்றி இதய நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம்,மறதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளின் அபாயத்தை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் நடப்பதன் மூலமாக உடலின் வளர்சிதை மாற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு உடலில் கொழுப்பு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, உடல் எடை ஆகியவை குறைய வழிவகுக்கும்.

குறிப்பாக நீரிழிவு நோய், இதய நோய், ரத்த அழுத்தம் குறையும் என்று ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

10,000 அடிகள் நடப்பதால் ஏற்படும் நேர்மறை விளைவுகள் பற்றி எந்த ஆய்விலும் இல்லை என்று ஆய்வாளர் கூறுகிறார்.

மேலும் 2,000 - 4,000 அடிகள் நடப்பது 36% இறப்பைக் குறைக்கும் என்றும் 4,000 -7000 அடிகள் நடப்பது அத்துடன் மேலும் 17% இறப்பைக் குறைக்கும் என்றும் அதற்கு மேல் நடப்பது பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறுகிறார்.

உடல் எடையைக் குறைக்க நல்ல உடல் இயக்கம், சத்தான உணவு, மன அழுத்தம் இல்லாமை வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

How many steps should walk each day for better health?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com