உலகம்
வங்கதேசத்துக்கு 1 லட்சம் டன் அரிசி: பாகிஸ்தான் முடிவு
வங்கதேசத்துக்கு 1 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தக உறவு மேம்படுவதை இது காட்டுவதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் மேற்கொள்ளும் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி இது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் அரிசி வா்த்தகத்தைத் தொடங்கிய பிறகு முதல் தொகுதியாக பாகிஸ்தானில் இருந்து 50,000 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.
முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இடைக்கால அரசு பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தவும் வா்த்தகத்தை அதிகரிக்கவும் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

