

ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. தீயானது அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு வேகமாகப் பரவியதையடுத்து தீப்பிழம்புகளுடன் அடர் கரும்புகை வெளியேறியது.
தீ விபத்து குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் நான்கு பேர் பலியானதாகவும், பலர் குடியிருப்புகளில் சிக்கியுள்ளதாகவும், ஒரு சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷென்சென் எல்லைக்கு அருகிலுள்ள ஹாங்காங்கின் புதிய பிரதேசங்களில் அமைந்துள்ள தாய்போ மாவட்டம் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டது. உயரமான குடியிருப்புத் தொகுதிகளால் சூழப்பட்டுள்ளது.
குடியிருப்புகளில் சிக்கியுள்ள குடியிருப்பாளர்களை மீட்பதற்கும் தீயைக் கட்டுப்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகத் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.