இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! இலங்கை கடலோர மக்களுக்கு எச்சரிக்கை!

இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பற்றி...
Earthquake of 6.6 magnitude strikes off Indonesia Sumatra
நிலநடுக்கம் (கோப்புப்படம்)
Updated on
1 min read

இந்தோனேசியா சுமத்ரா தீவில் இன்று(வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.56 மணியளவில் 25 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 எனப் பதிவாகியுள்ளது.

இதனால் குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். சுமார் 7 நொடிகள் வரை நிலநடுக்கம் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.

அதேநேரத்தில் இலங்கை கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறியுள்ளது.

மலாக்கா ஜலசந்தியில் உருவான சென்யார் புயல் இந்தோனேசியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நிலநடுக்கம் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Earthquake of 6.6 magnitude strikes off Indonesia Sumatra

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com