

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு இன்று (நவ. 27) சென்றடைந்தார்.
வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக இன்று துருக்கி நாட்டுக்குச் சென்றடைந்தார்.
இந்த நிலையில், சிறப்பு விமானம் மூலம் அங்காரா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தடைந்த போப் லியோ, துருக்கி அதிபர் ரெசப் தயிப் எர்டோகனை நேரில் சந்தித்து உரையாடவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை இஸ்தான்புல் நகரத்துக்குச் செல்லும் போப் லியோ அடுத்த 3 நாள்கள் அங்கு நடைபெறவுள்ள பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பிற மதங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.
இத்துடன், துருக்கியின் இஸ்னிக் நகரத்தில் உள்ள முதல் கிறிஸ்தவ சபையான நைசியா சபையின் 1700 ஆவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வதற்குத் திட்டமிட்டுள்ளார்.
பின்னர், வரும் நவ.30 ஆம் தேதி துருக்கியில் இருந்து புறப்பட்டு போப் பதினான்காம் லியோ லெபனான் நாட்டுக்குச் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் போப் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு, கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகியுள்ள போப் பதினான்காம் லியோ, உலக அமைதிக்காக உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தோனேசியா வெள்ளம்: உயிர்ப் பலிகள் 49 ஆக அதிகரிப்பு; 67 பேர் மாயம்! தேடுதல் பணிகள் தீவிரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.