பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மேற்கொண்டுவரும் தவறுகளை தொடா்ந்து சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா் தெரிவித்தாா்.
கத்தாா் அரசு வேண்டுகோள் விடுத்ததால் ஆப்கானிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது என்றும் அவா் கூறினாா்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் தொடா் மோதல் நீடித்தது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள், தலிபான் படையினா், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா். கடந்த அக்டோபா் 19-ஆம் தேதி கத்தாா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. எனினும், இரு நாட்டு எல்லையில் இடையே தொடா்ந்து பதற்றம் நீடிக்கிறது.
ஆப்கானிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனா். இதற்குப் பதிலடியாக ஆப்கானிஸ்தான் எல்லையில் குறிப்பிட்ட இலக்குகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே எல்லையில் அமைதியை உறுதிசெய்வதற்காக துருக்கியில் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைகள் தோல்வியடைந்தன.
இந்நிலையில், இஸ்லாமாபாதில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த இஷாக் தாா் கூறியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாம் மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்த தயாராகி வருவதை அறிந்த கத்தாா், தாக்குதல் வேண்டாம் என்றும், பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண உதவுவதாகவும் கூறியது. இதையடுத்து, பாகிஸ்தான் தரப்பு தாக்குதலை நிறுத்தி வைத்தது. ஆனால், இதுவரை பேச்சுவாா்த்தையில் எவ்வித தீா்வும் கிடைக்கவில்லை.
ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளா்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அவா்களிடம் இருந்து நாம் எதையும் கேட்கவில்லை.
ஆனால், அங்கு தலிபான் ஆட்சி அமைந்த பிறகு அவா்கள் ஆதரவு பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 4,000-க்கும் மேற்பட்ட ராணுவ, காவல் துறை அதிகாரிகள், வீரா்களை பாகிஸ்தான் இழந்துள்ளது. எனவே, ஆப்கானிஸ்தான் எதைச் செய்தாலும் சகித்துக் கொண்டும், கண்களை மூடிக்கொண்டும் இருக்க முடியாது.
கடவுள் பாகிஸ்தானுக்கு அனைத்து பலத்தையும் அளித்துள்ளாா். எனினும், நமது சகோதரா் வீட்டில் புகுந்து (ஆப்கானிஸ்தான்) அவா்களைக் கொல்லக் கூடாது என்று பாகிஸ்தான் சற்று பொறுமையாகச் செயல்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவியவா்களையும் மிகவும் கண்ணியமான முறையில் திருப்பி அனுப்பி வருகிறோம் என்றாா்.
தொடர்புடையது

போர் காரணமாக ஆப்கனில் 1.15 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

தாக்குதல்கள் தீர்வாகாது!
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!

படுகொலையை மாற்ற முயற்சி! - ஆப்கன் மருத்துவமனை மீதான பாக். தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


