
கனடாவில் பல்வேறு திரையரங்குகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்கள் இந்திய படங்கள் திரையிடுவதை நிறுத்தியுள்ளன.
கனடாவின் டொராண்டோ நகரத்தில் உள்ள ஃபிலிம்.சிஏ சினிமாஸ் நிறுவனத்தின் திரையரங்கின் மீது, கடந்த வாரம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்ததுடன், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
மேலும், ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பிரபல திரையரங்கின் மீதும் நேற்று (அக். 2) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், நல்வாய்ப்பாக எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலும், இரவுகளில் மட்டுமே நடைபெறும் இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் கனடாவின் பல்வேறு முக்கிய நகரங்களில், இந்திய திரைப்படங்களைத் திரையிடும் திரையரங்குகளைக் குறிவைத்தே நடத்தப்படுதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனடாவின் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்திய திரைப்படங்களைத் திரையிடப்போவதில்லை என அறிவித்துள்ளன.
இதுபற்றி, கனடாவில் செயல்படும் தென்னிந்திய திரைப்பட விநியோகஸ்தர்கள் கூறுகையில், கனடா திரையரங்கு நிறுவனங்களில் திரையிடப்படும் பிரபல திரைப்படங்களை நிறுத்துவதற்கு சிலர் பிரசாரம் மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.