
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியா வருவகிறார் என்பதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தது 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை அவர்கள் கோரி வருகின்றனர். இதனிடையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவுகள் கடந்த சில மாதங்களாக மேம்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி, வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 16 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு ஆணையம் தலிபான் அமைச்சர் முத்தாகி பயணம் செய்ய விதித்திருந்த தடையானது நீக்கப்பட்டதால் அவர் இந்தியாவுக்கு வருகிறார் எனக் கூறியுள்ளார்.
இந்தப் பயணத்தில், அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தலிபான் அமைச்சர் அமிர் கான் முத்தாகி கடந்த ஆக்ஸ்ட் மாதம் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் அவர் பயணம் செய்ய தடை விதித்திருந்ததால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.