
ஜெர்மனி நாட்டின் முனிச் விமான நிலையத்தில் தடையை மீறி பறந்த ட்ரோன்களால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முனிச் விமான நிலையத்தில் தடையை மீறி பறந்த ட்ரோன்களால் வெள்ளிக்கிழமை(அக். 3) மாலை விமான நிலைய ஓடுதளங்கள் மூடப்பட்டு விமான சேவை முடங்கியது. இதனால் சுமார் 6,500 பயணிகள் வெலியூர்களுக்குச் செல்ல இயலாமல் பரிதவித்தனர்.
விமான போக்குவரத்து முடங்கியதால் முனிச் நகரத்துக்கான 23 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவும், 48 விமானங்கள் ரத்து அல்லது காலதாமதமாக இயக்கப்பட்டிருப்பதாகவும் முனிச் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், விமான போக்குவரத்து சீராகும் வரை காத்திருந்த பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, நிலைமை சீராகினால் சனிக்கிழமை(அக். 4) அதிகாலை 5 மணிக்கு விமான ஓடுபாதைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆயினும், இன்று காலையிலும் ட்ரோன்கள் சில பறந்ததால் விமான சேவை தாமதத்துக்குப் பின் சீரானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.