காஸாவில் போர்நிறுத்தம்! இஸ்ரேல் முதற்கட்ட நடவடிக்கை!

காஸாவில் தாக்குதலை தற்காலிகமாக இஸ்ரேல் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - அமெரிக்க அதிபர் டிரம்ப்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - அமெரிக்க அதிபர் டிரம்ப்AP
Published on
Updated on
1 min read

காஸாவில் தாக்குதலை தற்காலிகமாக இஸ்ரேல் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இஸ்ரேல் - காஸா இடையிலான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நடத்திய பேச்சுவார்த்தையில், காஸாவுடனான போரை நிறுத்த ஒப்புக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து, போரை நிறுத்த காஸாவுக்கு டிரம்ப் 3 நாள் காலக்கெடு விதித்தார். இதனையடுத்து, காஸாவும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில், அமைதி பேச்சுவார்த்தையின் முதற்கட்ட நடவடிக்கையாக காஸாவின் சில பகுதிகளில் தாக்குதலை நிறுத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இதுகுறித்து டிரம்ப் தனது சமூக வலைதளத்தில், ``பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக காஸாவில் தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.

அமைதித் திட்டத்தை ஹமாஸ் உறுதிப்படுத்தினால், உடனடியாக போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படும்; பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர். தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

dot com
Summary

"Israel Agreed To Withdrawal Line, Hamas Must Move Quickly": Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com