இந்தோனேசியா பள்ளிக் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

இந்தோனேசியா பள்ளிக் கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து...
இந்தோனேசியா பள்ளிக் கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது
இந்தோனேசியா பள்ளிக் கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதுஏபி
Published on
Updated on
1 min read

இந்தோனேசியாவில் பள்ளிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

ஜாவா மாகாணத்தின் சிடோர்ஜா நகரத்தில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய பள்ளியின் கட்டடம், கடந்த செப். 29 ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், 12 முதல் 19 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக இந்தோனேசியாவின் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரையில், 61 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், பள்ளிக் கூடத்தில் இருந்த ஒரேயொரு மாணவர் மட்டும் எந்தவொரு காயமுமின்றி உயிர் தப்பிய நிலையில், படுகாயமடைந்த 99 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, விபத்து நடைபெற்ற 3 ஆவது நாளன்றே இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

Summary

The death toll from a school building collapse in Indonesia has risen to 61.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com