இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு! பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

காஸா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறித்து...
காஸா மீதான இஸ்ரேலின் போரில் 67,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
காஸா மீதான இஸ்ரேலின் போரில் 67,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்படம் - AP
Published on
Updated on
1 min read

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, யூதர்களின் சுக்கோத் பண்டிகையின் விடுமுறைகளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், பாலஸ்தீன ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதல்களில், 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், 251 இஸ்ரேலியர்கள் பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதில், பெரும்பாலான பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், 48 பேர் மட்டும் தற்போது ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, காஸாவில் மீதான இஸ்ரேலின் போரில், இதுவரையில் 67,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.

இந்த நிலையில், காஸா மீதான போர் தொடங்கி இன்று (அக். 7) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. மேலும், இஸ்ரேலில் தற்போது சுக்கோத் பண்டிகையின் விடுமுறைகள் தொடங்கியுள்ளதால், இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் போர் தொடங்கியது முதல், ஈரான் உள்ளிட்ட 5 நாடுகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.

காஸாவுக்குள் நிவாரண உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், உணவு மற்றும் மருத்துவ வசதிகளுக்கு அங்கு பெரும் பஞ்சம் உருவாகியுள்ளது. இதனால், நாள்தோறும் ஏராளமான குழந்தைகள் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடினாலும் உயிரிழந்து வருகின்றனர்.

இத்துடன், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 முக்கிய அம்சங்கள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

இதையடுத்து, இந்தப் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை பலத்த பாதுகாப்புடன் எகிப்தின் ஷர்ம் எல்- ஷெயிக் நகரத்தில், கடந்த அக். 6 ஆம் தேதி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தோனேசியா பள்ளிக் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

Summary

As the war between Israel and Hamas in Gaza has marked two years, security measures have been increased in major Israeli cities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com