/
இராக்கின் குா்து பிராந்தியத்தில் உள்ள சுலைமானியா விமான நிலையத்தில் விமானங்கள் வருவதற்கு கடந்த 2023 முதல் விதிக்கப்பட்டிருந்த தடையை துருக்கி வெள்ளிக்கிழமை நீக்கியது.
துருக்கி அதிபா் எா்டோகனை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, இராக் குா்து பிராந்திய தலைவா் நெச்சிா்வான் பா்சானி இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.
துருக்கியில் குா்து மாகாணத்துக்கு கூடுதல் அதிகாரம் கேட்டு போராடி வந்த குா்திஸ்தான் மக்கள் கட்சி (பிகேகே) சுலைமானியா விமான நிலையத்தைத் தவறாகப் பயன்படுத்தும் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த நிலையத்துக்கு துருக்கி தடை விதித்திருந்தது. ஆனால் ஆயுதங்களைக் கைவிட்டு, இயக்கத்தைக் கலைக்க பிகேகே முடிவு செய்துள்ள நிலையில், அந்தத் தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது
நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!

தில்லி விமான சேவையை மீண்டும் தொடங்கியது ஏா் சீனா

ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தோ்தல் துறையினா் சோதனை!
தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய்க்கு வரவேற்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



