இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலில் பலரின் உயிரைக் காப்பாற்றிய நேபாள இளைஞர் பிபின் ஜோஷி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு சடலமாக அனுப்பி வைக்கப்பட்டார்.
2023 செப்டம்பரில் கிபுட்ஸ் அலுமிமுக்கு 16 மாணவர்களுடன் சென்ற ஜோஷி, அங்கு விவசாயம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆராய்ச்சிப் படிப்பு, இளம் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், அக்டோபர் 7, 2023-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுகளுக்கு மத்தியில் சைரன் ஒலித்தவுடன், மாணவர்கள் அனைவரும் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பதுங்கினர்.
இருப்பினும், அவர்கள் பதுங்கியிருந்த இடத்திற்குள் ஹமாஸ் படையினர் வெடிகுண்டை வீசியதில் பலரும் காயமடைந்தனர். இரண்டாவதாக வீசப்பட்ட வெடிகுண்டைப் பிடித்த ஜோஷி, அதனைத் தூக்கி வெளியே எறிந்தார். ஜோஷியின் இந்தத் துரிதமான நடவடிக்கையால் பலரின் உயிரும் காப்பாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜோஷியை ஹமாஸ் படையினர் சிறைபிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து, சில நாள்களில் அவரை காஸா மருத்துவமனைக்கு இழுத்துச் செல்லும் விடியோவையும் ஹமாஸ் வெளியிட்டது.
இதனிடையே, இஸ்ரேலுக்கு உடனடியாக விரைந்த ஜோஷியின் பெற்றோர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் ஜோஷியை மீட்டுத் தருமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து, நம்பிக்கையுடன் இருந்து வந்தனர்.
இந்த நிலையில்தான், ஜோஷியின் உயிரிழந்தது குறித்தும், அவரது உடலை திங்கள்கிழமை இரவில் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்தும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், வருகிற அக்டோபர் 26-ல்தான் ஜோஷியின் 25 ஆவது பிறந்தநாள்.
இதையும் படிக்க: எஞ்சிய 20 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.