
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற மோதலில், 40 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ள வெவ்வேறு இடங்களில், தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களுக்கு, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் சுமார் 40 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தான் மாகாணத்தின் ஸ்பின் பொல்டாக் பகுதியின் நான்கு இடங்களில், ஆப்கனின் தலிபான்கள் மற்றும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் எனும் பயங்கரவாத அமைப்பினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அப்போது, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 15-20 ஆப்கனின் தலிபான் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், இந்தச் சம்பவத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கைபர் பக்துன்குவா மாகாணத்தின் குர்ராம் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகள் மீது நேற்று (அக். 14) இரவு ஆப்கனின் தலிபான்கள் தாக்குதல் நடத்த முயன்றனர்.
ஆனால், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 25 முதல் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதகளில் அப்பகுதிவாசிகள் 15 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானை விற்ற கை பொம்மை! பாக். பிரதமர் ஷெபாஸுக்கு வலுக்கும் கண்டனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.