
எகிப்தில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புகழ்ந்து பேசியது பாகிஸ்தான் நாட்டுக்கே அவமானகரமானதாக இருப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அவரின் புகழ்ச்சியைக் குறிப்பிட்ட எச்கேபி கட்சியைச் சேர்ந்த அம்மர் அலி, ``டிரம்ப் மீதான ஷெபாஸ் ஷெரீப்பின் தேவையில்லாத மற்றும் முடிவில்லாத புகழ்ச்சி, ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’’ என்று விமர்சித்துள்ளார்.
மற்றொருவர், ``24 கோடி பாகிஸ்தானியர்களை ஷெபாஸ் அவமதிக்கிறார்’’ என்று கூறினார்.
மேலும் ஒருவர், ``பில்லியன் டாலருக்காக பாகிஸ்தானை கை பொம்மை விற்று விட்டது’’ என்று விமர்சித்தார்.
எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்த டிரம்ப்புக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்ற பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று மீண்டும் பரிந்துரைத்தார்.
இதையும் படிக்க: உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா: பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.