
அமேசான் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் 15 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், எண்ணிக்கை குறித்த தகவல் எதுவும் பெறப்படவில்லை.
உலகளவில் பல்வேறு நிறுவனங்களில் செய்யறிவு பயன்படுத்தப்பட்டு வரும்நிலையில், அந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை பணிநீக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மனிதர்களுக்கு பதிலாக செய்யறிவைப் பயன்படுத்துவதால் செலவு குறையும், வேலையும் துரிதமாகும் என்பதால் பல்வேறு நிறுவனங்களும் செய்யறிவுக்கு மாறி வருகின்றன.
இந்த நிலையில்தான், அமேசான் நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலேயே செய்யறிவு தொடர்பாக 100 பில்லியன் டாலரை அமேசான் முதலீடு செய்துள்ளது.
சமீபத்தில்தான், அமேசானில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இதையும் படிக்க: விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்கி மேலாளரே மோசடியில் சிக்கினார்! ரூ. 13 லட்சம் இழப்பு!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.