
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மோதல்களைத் தொடர்ந்து, 48 மணிநேரம் போர்நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையே கடந்த இரண்டு வாரங்களாகக் கடுமையான மோதல்கள் நடைபெற்று வந்தன. இந்த மோதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வேண்டுகோளை ஏற்று, போர்நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து தலிபான் அரசு எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.
ஆப்கானிஸ்தான் கண்டாஹர் மாகாணத்தில், பாகிஸ்தான் மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும், இந்தத் தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தலிபான் அரசு தெரிவித்திருந்தது.
முன்னதாக, 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இலங்கை பிரதமர் இந்தியா வருகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.