இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக நாளை (அக். 15) இந்தியா வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பின்பு, பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளை முதல் முறையாக, இந்தியா வருகின்றார். வரும் அக்.18 ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தில், அவர் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்திப்பார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இலங்கையின் கல்வித் துறை அமைச்சரகாவும் பதவி வகிக்கும் பிரதமர் அமரசூரிய, தில்லியில் உள்ள ஐஐடி மற்றும் என்ஐடிஐ ஆகிய கல்வி நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், என்டிடிவியின் உலக மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் அமரசூரிய, அவர் படித்த தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு நேரில் செல்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு; இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதீஷ்குமார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.