மதுரையில் மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால் நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
புதுச்சேரியில் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 3 மணிக்கு மேல் மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதில் தமிழ்நாடு - கேரளா இணைக்கும் திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்குப் பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும் மதுரை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியான வான் கட்டுப்பாட்டு அறை கட்டடத்தையும் திறந்து வைப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும், அதனை தொடர்ந்து மதுரை மண்டேலா நகர்ப் பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக டிடிவி தினகரன், பாமக அன்புமணி ராமதாஸ், ஜி கே வாசன் ஐ ஜே கே நிறுவனர் பாரிவேந்தர், ஜான்பாண்டி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.
மதுரை மண்டையில் நகர்ப் பகுதியில் பிரதமர் பங்கேற்கும் தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது தமிழகக் காவல்துறை சார்பாக வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் ஐந்து மாவட்ட குழுவினரை வரவழைக்கப்பட்டு மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில் விழா மேடை பொதுமக்கள் அமரும் பகுதி, பொதுமக்கள் அமரும் நாற்காலிகளும் திடலுக்குக் கொண்டு வரப்பட்டு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
Summary
As Prime Minister Narendra Modi is scheduled to participate in various events in Madurai on March 1st, preparations for the event are underway in earnest.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்
மார்ச் 31-ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி! ரூ.5,295 கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

நாளை பிரதமர் மோடி வருகை! திருச்சியில் புதிய கட்டுப்பாடுகள்!!

மார்ச் 11ல் என்டிஏ தேர்தல் பிரசார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


