மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சிரியாவின் இடைக்கால அதிபர் சந்தித்துள்ளது குறித்து...
ரஷிய அதிபர் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமது அல் - ஷரா
ரஷிய அதிபர் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமது அல் - ஷராபடம் - ஏபி
Published on
Updated on
1 min read

ரஷியா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் விளாதிமீர் புதினை, சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமத் அல் - ஷரா இன்று (அக். 15) நேரில் சந்தித்துள்ளார்.

சிரியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த அசாத் குடும்பத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும், முன்னாள் அதிபர் பஷார் அல் - அசாத் நாட்டை விட்டு தப்பியோடி ரஷியாவில் குடும்பத்துடன் தஞ்சமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, அசாத் அரசின் படைகளுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த போராளிக்குழுவின் தலைவரான அஹமது அல் - ஷரா, சிரியாவின் இடைக்கால அதிபராகப் பதவியேற்றார்.

இந்த நிலையில், சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரி வரும் சிரிய அதிபர் அல் - ஷரா, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை, இன்று நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் மற்றும் முதலீடுகள் குறித்து உரையாடியதாகக் கூறப்பட்டுள்ளது. இத்துடன், சிரியாவில் உள்ள ரஷியாவின் விமானப் படை மற்றும் கடற்படை தளங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளன.

முன்னதாக, சிரியாவில் நீண்டகாலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் முன்னாள் அதிபர் பஷார் அல் - அசாதின் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷியாவின் படைகள் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாக். போலியோ பணியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்! காவல் அதிகாரி சுட்டுக்கொலை!

Summary

Syrian Interim President Ahmed al-Sharaa met with Russian President Vladimir Putin in person today (Oct. 15) in the Russian capital, Moscow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com