
யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் தலைவர்களைக் குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹவுதிகளின் தலைமைத் தளபதி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில், படுகாயமடைந்த ஹவுதிகளின் தலைமைத் தளபதி மேஜர். ஜெனரல். முஹம்மது அப்துல் கரீம் அல் - கமாரி உயிரிழந்ததாக, இன்று (அக். 16) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யேமனில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் மேஜர். ஜெனரல். முஹம்மது அப்துல் கரீம் அல் - கமாரியின் மீது ஐ.நா. பல முக்கிய தடைகளை விதித்திருந்தது.
முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போரில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிரியாவில் பாதுகாப்பு அமைச்சக வாகனத்தின் மீது தாக்குதல்! 3 வீரர்கள் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.