
சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 3 வீரர்கள் கொல்லப்பட்டதுடன்; 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிரியாவின் கிழக்கு நகரங்களான தெயிர் எல்-ஸோர் மற்றும் மயாதீன் இடையிலான நெடுஞ்சாலையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பேருந்தின் மீது இன்று (அக். 16) வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், 3 வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 9 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரையில், இந்தச் சம்பவத்துக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காததால், அப்பகுதியில் மறைந்திருந்து செயல்படும் ஐஎஸ் அமைப்பின் சிலீப்பர் செல்களின் தாக்குதலாக இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் பெரும் பகுதிகளைக் கைபற்றியுள்ள ஐ.எஸ். அமைப்பு, சிரியாவின் புதிய இடைக்கால அதிபரான அஹமது அல் - ஷராவின் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் மீறினால் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தும்: டிரம்ப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.