

நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஏர் சீனா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.
சீனாவின் ஹாங்சோவிலிருந்து தென் கொரியாவின் சியோலுக்கு சனிக்கிழமை புறப்பட்ட ஏர் சீனா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விமானத்தின் கைபைகள் வைக்கும் கேபினில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
பயணி ஒருவரின் பையில் இருந்த லித்தியம் பேட்டரியால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடனே விமானம், ஷாங்காயில் உள்ள புடாங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது இந்த சம்பவத்தின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தீ விபத்து காரணமாக விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் மத்தியில் ஒருவித பீதி காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.