பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா

பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா...
பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா
பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானின் தொலை உணா்வு செயற்கைக்கோள் ஒன்றையும், தனது இரண்டு செயற்கைக்கோள்களையும் தனது ராக்கெட் மூலம் சீனா ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது.

இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகையில், ‘லிஜியான்-1 ஒய்8 ராக்கெட் மூலம் பாகிஸ்தான் தொலை உணா்வு செயற்கைக்கோள் பிஆா்எஸ்எஸ்-2, இரண்டு சீன செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டு, அவற்றின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டன’ என்று தெரிவித்தது.

இந்த ஆண்டு சீனா ஏவிய பாகிஸ்தானின் மூன்றாவது செயற்கைக்கோள் இது. இதற்கு முன்னா், ஜனவரியில் பிஆா்எஸ்எஸ்-1, ஜூலையில் பிஆா்எஸ்சி-இஓ1 ஆகிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்களை சீனா ஏவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com