உகண்டாவில் கோர விபத்து: 63 பேர் பலி!

மேற்கு உகண்டாவில் சாலை விபத்து பற்றி..
உகண்டாவில் விபத்து
உகண்டாவில் விபத்து
Published on
Updated on
1 min read

மேற்கு உகண்டாவில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்துகள் உள்பட பல்வேறு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 63 பேர் உயிரிழந்ததுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

வடக்கு உகாண்டாவின் முக்கிய நகரமான கம்பாலா-குலு நெடுஞ்சாலையில் எதிரெதிர் திசைகளில் சென்ற இரண்டு பேருந்துகள், லாரி மற்றும் கார் ஆகிய 2 வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகளும் மோதியதில் அதனுடன் பயணித்த சில வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தன.

விபத்தில் காயமடைந்தவர்கள் உகண்டாவின் மேற்கு நகரமான கிரியாண்டோங்கோவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உகாண்டாவில், 2024 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 5,144 பேர் கொல்லப்பட்டனர். அதிகாரப்பூர்வ காவல்துறை புள்ளிவிவரங்களின்படி, 2023 இல் 4,806 ஆகவும், 2022 இல் 4,534 ஆகவும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

At least 63 people were killed when several vehicles, including buses, collided head-on on a highway in western Uganda.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com