

அயர்லாந்து புதிய அதிபராகிறார் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா் கேதரின் கானலி!
தேர்தலின் முதல்கட்ட முடிவுகள், கனோலி 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதைக் காட்டுகின்றன. இதைத் தொடர்ந்து, அதிபர் தேர்தலில் எதிரணி வேட்பாளரான ஹீத்தெர் பின்வாங்கியிருக்கிறார்... அயர்லாந்து அதிபராக விரைவில் பதவியேற்க உள்ளார்.
இந்தத் தகவலை, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அயர்லாந்தின் மைய - வலதுசாரி கட்சியான ‘ஃபைன் கேல்’ கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹீத்தெர் ஹம்ப்ரேஸ் பகிரங்கமாக அறிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது. அயர்லாந்தில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இறுதி முடிவு வெளியாவதற்குள் சனிக்கிழமை(அக். 25) செய்தியாளர்களைச் சந்தித்த ஹீத்தெர், “நம் அனைவருக்கும் அதேபோல, எனக்கான அதிபராகவும் கேத்ரின் இருப்பார்; அவருக்கு வாழ்த்தை உரித்தாக்குகிறேன்’ என்றார்.
கடந்த 2016முதல் அயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் கனோலி, காஸாவில் நீடித்த சண்டையில் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்ததால் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்தவர். அவருக்கு அயர்லாந்து துணை அதிபர் சிமோன் ஹாரிஸ் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.