

24 கோடி பாகிஸ்தானியர்களும் காஷ்மீர் மக்களுடன் துணை நிற்கிறோம் என்று பாகிஸ்தானின் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் காஷ்மீரில் கடந்த 1947-இல் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கருதி பாகிஸ்தானில் அக். 27-ஆம் தேதி ‘கறுப்பு நாளாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பாகிஸ்தான் அதிபரும், பிரதமரும் இன்று(அக். 27) மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் மக்களை இந்தியா தொடர்ந்து நிராகரிப்பதாகவும், அந்த மக்களின் சுய உரிமையை மீட்டெடுப்பதில் நிராகரிப்பதாதகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் போராட்டத்தில் காஷ்மீர் மக்கள் தனியாக நிற்கவில்லை என்றும், 24 கோடி பாகிஸ்தானியர்களும் அவர்களுடன் சுய உரிமைக்கான போராட்டத்தில் ஆனித்தரமாகத் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.