

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அரசு, நட்பு நாடுகளை அந்நியப்படுத்துவதாக அந்நாட்டு முன்னாள் கருவூலச் செயலர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் ஒரு பள்ளியில் அந்நாட்டு முன்னாள் கருவூலச் செயலர் ஜினா ரைமோண்டோ பேசுகையில், ``இந்தியாவுடன் நாம் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம். டிரம்ப் நிர்வாகம், நமது அனைத்து நட்பு நாடுகளையும் கோபப்படுத்தியுள்ளது.
அமெரிக்காதான் முதலில் என்பது ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கா தனியாக இருப்பது ஒரு பேரழிவைத் தரும் கொள்கையாகும்.
ஐரோப்பா அல்லது தென்கிழக்கு ஆசியாவின் (ஜப்பான்) பெரும்பகுதியுடன் வலுவான உறவுகள் இல்லாத அமெரிக்கா, ஒரு வலுவற்ற அமெரிக்காவாகத்தான் இருக்கும். ஐரோப்பாவுடன் நாம் மிகவும் வலுவான வணிக உறவுகளைக் கொண்டிருக்க வேண்டும். இந்தியாவுடனான உறவில் நாம் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம்.
எல்லாவற்றையும் அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ‘எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது!’ -வட கொரிய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த புதின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.