அமெரிக்காவிடம் ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி!

அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி செய்யப்படும் என்று சீனா அறிவிப்பு
டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பு
டிரம்ப் - ஜின்பிங் சந்திப்புAP
Published on
Updated on
1 min read

அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி செய்யப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் சீன அதிபர் ஜின்பிங் வணிகப் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில், அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 25 மில்லியன் டன் (2500 கோடி கிலோ) சோயா பீன்ஸ் இறக்குமதி செய்யப்படும் என்று சீன கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசெண்ட் தெரிவித்தார்.

டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பு
டிரம்ப் - ஜின்பிங் சந்திப்புAP

ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் அமெரிக்க சோயாபீன்ஸ் வாங்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது என்று கருவூல செயலாளர் தெரிவித்துள்ளார்.

இப்போது முதல் ஜனவரி வரையில் மட்டும் 12 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் வாங்குவதன் மூலம் தொடங்கும் இந்த ஒப்பந்தம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.

சீனா மீதான 57 சதவிகித வரிவிதிப்பில் 10 சதவிகிதத்தைக் குறைத்து டிரம்ப் அறிவித்த நிலையில், சோயா பீன்ஸ் இறக்குமதி குறித்து சீனா அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: சீனா மீதான வரி 10% குறைப்பு! டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பின் முழு விவரம்!!

Summary

China agrees to purchase 25 million metric tons of US soybeans annually

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com