

பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.
எங்கா மாகாணத்தில் உள்ள குகாஸ் கிராமத்தில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எங்கா மாகாணத்தின் ஆளுநர் பீட்டர் இபடாஸ், இந்த நிலச்சரிவில் உள்ளூரைச் சேர்ந்த 30 பேர் வரை இறந்துள்ளதாகவும், 18 உடல்கள் ஏற்கெனவே மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் இறப்பு எண்ணிக்கை 21 ஆக பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு மே மாதம் எங்கா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 670 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பப்புவா நியூ கினியா அரசு 2,000 க்கும் மேற்பட்டோர் புதைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.