ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20,000 டாலர் சம்பளமா?

ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20,000 டாலர் சம்பளம் வழங்கப்படுவதாக வெளியான விடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் வேலை
அமெரிக்காவில் வேலை
Published on
Updated on
1 min read

தெற்கு டகோடா பகுதியில் மிக உயரத்தில் இருக்கும் கோபுரத்தில் ஏறி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார பல்பை மாற்றும் தொழிலாளிக்கு 20 ஆயிரம் டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் உள்ள பகுதியே ரேபிட் சிட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த கெவின் ஷேமிட்த் என்பவர் ஒவ்வொரு முறை இந்த கோபுரத்தின் மீது ஏறி பல்பை மாற்றும்போதும், இவருக்கு 20 ஆயிரம் டாலர் சம்பளம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொலைத்தொடர்பு கோபுரம் என்றும், விமானங்களுக்கு எச்சரிக்கை செய்யும் சிவப்பு ஒளிரும் மின் விளக்கை பொருத்தும் பணியைத்தான் இவர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இது மட்டுமல்ல, இந்தப் பகுதியில் பல்வேறு கோபுரங்களிலும் இவர் மின் விளக்குகளை மாற்றி வருகிறாராம். சில நேரங்களில் மேலே செல்ல செல்ல மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமாம். அப்போது இவர் தூசு போல பறந்து சென்றுவிடுவோமோ என்று நினைத்திருக்கிறாராம். நண்பர்கள் சிலருக்கு நான் இந்த வேலையைச் செய்கிறேன் என்று நம்பவே முடியாது. அவர்கள் எல்லாம் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே பார்த்தாலே பயமாக இருக்குமே என்பார்கள் என்கிறார்.

இந்த தகவலை அறிந்த இளைஞர்கள் பலரும், மின்சார பல்புதானே, நாங்களே மாற்றுவோம் என்று, இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். இவர் மாற்றுவது, 457 அடி உயரத்தில் இருக்கும் கோபுரத்தில்.

உயிரைப் பணயம் வைத்து இவர் இந்த கோபுரத்தின் மீது ஏறுகிறார். கடும் பயிற்சி இருந்தால் மட்டுமே இந்த வேலையை செய்ய வேண்டும். பலரும் இது பற்றிய விடியோவைப் பார்த்து இந்த கோபுரத்தில் ஏறி இறங்கவே 6 மாதம் ஆகிவிடும் போல இருக்கிறதே என்று கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இது ஒரு தொலைத்தொடர்பு கோபுரம் என்றும், உலகிலேயே ஆபத்தான பணிகளில் இதுவும் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலராலும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com