நேபாளத்தில்..! இன்ஸ்டாகிராம், யூடியூப் செயலிகளுக்குத் தடை!

நேபாளத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத, இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆக.28 ஆம் தேதி, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், காலக்கெடு முடிவடைந்தும் மெட்டா (முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், வாட்ஸப்), ஆல்ஃபாபெட் (யூடியூப்), எக்ஸ், ரெட்டிட் மற்றும் லின்க்ட் இன் ஆகிய நிறுவனங்கள் தங்களது சமூக வலைதளங்களை பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பதிவு செய்யாத நிறுவனங்களின் சமூக வலைதளங்கள் அனைத்தும், இன்று (செப்.4) நள்ளிரவு முதல் நேபாளத்தில் தடை செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதில், டிக்டாக் நிறுவனம் பதிவு செய்ய பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், டெலிகிராம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேபாள அரசின் இந்த நடவடிக்கை குறித்து மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது வரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!

Summary

Social media platforms, including Instagram and YouTube, that are not registered under Nepalese government regulations have been banned.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com