2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

நிகழாண்டில் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற மாகாணம் குறித்து...
2025-ல் மட்டும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 605 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன
2025-ல் மட்டும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 605 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில், நிகழாண்டில் (2025) மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தான் உடன் சுமார் 1,300 கி.மீ. நீள எல்லை அமைந்துள்ள, பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், 2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் 605 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையில் நடைபெற்ற தாக்குதல்களின் மூலம், 138 பேர் கொல்லப்பட்டதாகவும், 352 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 79 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன், 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த ஆக்ஸ்ட் மாதத்தில் மட்டும், கைபர் பக்துன்குவாவில் 129 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில், பன்னு மாவட்டத்தில் 42 தாக்குதல்களும், வடக்கு வசிரிஸ்தானில் 15 தாக்குதல்கள், தெற்கு வசிரிஸ்தானில் 14 தாக்குதல்கள் மற்றும் தீர் மாவட்டத்தில் 11 தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன.

இதேபோல், இஸ்லாமாபாத் நகரத்தைச் சேர்ந்த அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் மாதம் மட்டும் பாகிஸ்தானில் 78 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் 53 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 100-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது முதல், பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இதில், பெரும்பான்மையான தாக்குதல்கள் பாகிஸ்தானின் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நேபாளத்தில்..! இன்ஸ்டாகிராம், யூடியூப் செயலிகளுக்குத் தடை!

Summary

In the Khyber Pakhtunkhwa province of Pakistan, there have been more than 600 terrorist attacks this year (2025) alone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com