
இலங்கையில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரத்தின் அருகில் வெல்லவாயா பகுதியில் அமைந்துள்ள மலையின் மீது நேற்று (செப்.4) இரவு பயணிகள் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சுமார் 1,000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், 15 பேர் சம்பவயிடத்திலேயே பலியான நிலையில், 5 குழந்தைகள் உள்பட 16 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்துவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, இலங்கையில் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்படுகின்றது. இதனால், பெரும்பாலான மலைகளின் மீது செல்லும் வாகனங்கள் அவ்வப்போது விபத்தில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.